Total Pageviews

Tuesday 31 December 2019

திருப்பாவை 9






கோதை அக்கா மிகுந்த விநயம் உள்ளவள் ; பாசமும் கண்டிப்பும் உள்ளவள்

மார்கழி மாதம் அவள் கோவிலுக்கு வரும் முன்பு ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக ஊரார் அனைவரையும் எழுப்புகிறாள்

அவர்களை அழைத்துக்கொண்டு கண்ணனின் வீட்டுக்கு வந்துவிட்டாள்

இப்போது குடும்பத்தாரில் யாரை முதலில் எழுப்புவது

மரியாதைக்குரிய மாமணை மாமியை கொழுந்தனை எழுப்பவில்லை

கண்ணனின் தங்கையான சுபத்ரையை எழுப்புகிறாள்

மற்றவர்களை எழுப்பும் பொது அவள் காட்டும் பணிவு இங்கு வரவில்லை

என்னதான் தேவர்கள் என்றாலும் மனிதனாக வரும்போது பூமிக்குரிய ஜபர்தஸ்து வந்துவிடும்

இவள் நாத்தனார் அல்லவா ?

அவளை பாராட்டி புகழ்ந்தாலும் கண்டிப்பும் கலந்தே வருகிறது

தூமணி மடத்தில் தூபம் கமள அழகிய பஞ்சணை மேல் துயில் கொள்கிறாவளே என பெருமை பாராட்டி அழைத்தாலும் அடுத்து கண்டிப்பு வந்துவிடுகிறது

இவ்வளவு பாடுகிறேனே எந்திரிக்க வில்லை

நீயென்ன செவிடோ ; ஊமையோ பெருந்தூக்கம் உன்னை அமுக்கி விடுமோ

என திட்டி விட்டு மாமியாரிடம் வத்தியும் வைக்கிறாள்

மாமாயன் ; மாதவன் என நாம ஜெபம் செய்ய வேண்டிய நேரத்தில் பொறுப்பில்லாதவளாக தூங்குகிறாளே ?

வீட்டுக்குள்ளேயே வளர்ந்த பிள்ளை ஆண்டாள்

அருள் நிலையில் பாடியபோது தமிழ் வார்த்தை பிரயோகம் இருக்கிறதே அதை திருப்பாவை முழுதும் ரசிக்கலாம்

இப்பாடலில் அனந்தலோ என்கிறாளே

அனந்தல் என்றால் என்ன

ஏதாவது யூகிக்க முடிகிறதா

அனந்தன் என்றால் ஆதி சேஷன்

பெண்பால் அனந்தல் என்கிறாள்

பகலெல்லாம் தூங்குகிற பாம்பை போன்றவளே என திட்டுகிறாள்



No comments:

Post a Comment