Total Pageviews

Tuesday 31 December 2019

திருப்பாவை 19






குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்


கோதை அக்காவின் அணுகுமுறை திறமையானது


மூத்தவள் நப்பின்னையை அழைத்து பேசிக்கொண்டிருந்தவள் ; அவளோடு தொடர்பு படுத்தி கிறிஷ்ணனையும் எழுப்புகிறாள் ; அப்படியே நப்பின்னையையும் அவனை எழுப்பிவிடு என்பதை வஞ்ச புகழ்ச்சி அணியில் பேசுகிறாள்


கோட்டுக்கால் மெத்தை என்பதிலேயே மரச்சட்டங்களால் செய்யப்பட்ட கட்டில் ; அதுவும் பூச்சி அரிக்காத தோதகத்தி மரத்தால் ஆன கட்டில் அதில் இலவம்பஞ்சால் உருவாக்கப்பட்ட மெத்தை என்பதை அடையாளப்படுத்தி விட்டாள்


அதில் பூங்கொத்து போன்ற பூங்குழலால் நப்பின்னையுடன் தூங்குகின்றவனே


நப்பின்னை எழுந்து உன் பள்ளியறையின் கதவை திறக்க சிபாரிசு செய்வாயாக


மையால் எழுதப்பட்ட அழகிய கண்ணை உடையவளே


கிறிஷ்ணன் தூக்கத்தில் இருந்து எழுவதற்கு உன் மனம் இடம் கொடுப்பதில்லை ; அவனை ஒரு நிமிடம் கூட பிரிவதற்கு நீ தயாரில்லை

ஆனாலும் சகலத்தையும் நிர்வாகிக்கும் ; காத்தல் ; படியளத்தல் என்ற தொழிலை செய்ய வேண்டிய அதிதேவர் அவரல்லவா

கணவன் தொழிலில் சிறந்தவனாக இருக்க மனைவி இடையூறாக இருக்க கூடாதல்லவா

அது தர்மம் ஆகாதே ; பொறுத்துக்கொள் என்கிறாள்

தத்துவம் அன்று தகவடைக


இதற்கு மேல் எந்தப்பெண்ணாவது கணவனை தொட்டுக்கொண்டு படுக்கையில் இருப்பாளா


எந்திருச்சி வந்து பள்ளியறை கதவை திறந்து கிறிஷ்ணனை தரிசித்துக்கொள்ளுங்கள் என அனுமதித்து விட்டாள்

No comments:

Post a Comment