Total Pageviews

Tuesday 31 December 2019

திருப்பாவை 25




ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர

அக்கா இங்கு கிறிஷ்ணரின் நோக்கம் ஒன்றை கோடிட்டு காட்டுகிறாள்

ராமாவதாரத்தில் அறிந்தோ அறியாமலோ தன் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய கைகேயியை மகிமைப்படுத்த முடியவில்லை . உலகத்தால் அவமதிப்புக்கு ஆளானாள்

கைகேயியை கெடுத்தவள் கூனி

அன்பிலே விஷத்தை கலந்தவள் கூனி

சொல்வார் பேச்சால் கெட்டவள் அவள்

பெருந்தீமைகள் உண்டாகி கணவனை இழந்தாள்

பிரியமானவனை காட்டுக்கு அனுப்பி ; சொந்த மகன் பராதனாலும் ஒதுக்கி வைக்கப்பட்டாள்

அவதார நோக்கம் நிறைவேற பழிக்கு உரியவளானாள்

ஆகவே மாற்றாந்தாயை மகிமைப்படுத்த கிறிஷ்ணாவாதாரத்தை பயன்படுத்திக்கொண்டார்

யசோதை தான் உண்மைத்தாய் என்றே அறிந்திருந்தாள்

ஆனால் கிறிஷ்ணர் ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர்வதை அறிந்தே இருந்தார்

தன்னை கொல்ல வல்ல குழந்தை ஒன்று அவதரித்து பிருந்தாவனத்தில் வளர்கிறது என்பதை அதை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கம்ஸன் அறிந்திருந்தான்

நாராயணன்ரே கிறிஷ்ணனாக பூமிக்கு அவதரித்து வந்திருந்தாலும் ; அவரை யார் என்று யாராலும் அவதானிக்க முடியவில்லை

கம்ஸன் பல வகையான அசுர ஆவிகளை அக்குழந்தையை கொல்லும்படியாக ஏவி விட்டான்

அவை அனைத்தையும் அந்தக் குழந்தை முறியடித்தது

ஆனால் அதை பார்ப்போர்க்கு ஏதோ அமானுஷ்யம் நடக்கிறது என்று மட்டும் தான் சொன்னார்கள்

அதே நேரத்தில் அதன் தாயான யசோதைக்கோ இனம் புரியா பயம் ; கவலை ; குழப்பத்துடன் நாட்கள் ஓடின

இதுவும் அல்லாமல் அந்தக் குழந்தை அடிக்கிற லூட்டிகள் பற்றியும் ஓயாது புகார்கள் ; ஆனால் ஒன்றுமே நிருபனை ஆகவில்லை

ஆகவே அவள் சிடுசிடுக்கவும் ; தண்டனை கொடுக்கவும் ஆரம்பித்திருந்தாள்
ஒன்றும் அறியாத குழந்தையை போலவே நடித்துக்கொண்டு தன்னை இன்னார் என்றும் உணர்த்தி வந்தார் ஸ்ரீகிறிஷ்ணர்

அவள் கொடுக்கிற தண்டனைகள் அனைத்தையும் உள்ளன்போடும் ஏற்றதுபோலவே நடித்தும் வந்தார்

பிரம்மா ; இந்திரன் ; வருணன் முதலிய தேவர்களும் கூட ; ஒரு மனிதனா இத்தகைய வல்லமை உள்ளவன் என சோதித்து அவரை இன்னார் என்று அறிந்துகொண்டனர்

யுகங்கள் தோறும் அவதரிப்பேன் என கீதையின் கிறிஷ்ணர் சொல்லிவிட்டார் சொல்லிவிட்டார் என மனிதர்கள் சொல்லிக்கொள்வார்களே தவிர அவர் அவதரித்து வந்தபோதெல்லாம் அவர் இன்னார் என்று அறியாமல் முடிந்த அளவு கெடுதல் தானே செய்தார்கள்

ராமருக்கும் மன நோவைத்தானே தந்தார்கள்

கிறிஷ்ணருக்கும் ; இயேசுவுக்கும் நோவைத்தான் தந்தார்கள்

ஆனாலும் இந்த அவதாரங்கள் அனைத்தும் அவர்களது அன்னையரின் பெயரால் அழைக்கப்பட்டனவே தவிர தகப்பனை அவ்வளவு முக்கியப்படுத்தவில்லை

கோசலை ராமா ; கைகேயி ராமா ; யாஸோதை மைந்தா ; மேரி மைந்தா என்றுதான் அவர்கள் அழைக்கப்பட்டார்கள்

காரணம் ஒன்றே ஒன்று தான்

பூமியில் அவதார நோக்கம் நிறைவேற ; குடும்ப பாவங்கள் ; குல பாவங்கள் ஏறாதவர்களாக இவர்கள் அவதரிக்க வேண்டியிருந்தது

அதற்காக ஆண் வித்து கலக்காமல் ; பெண்ணின் சூலை மட்டுமே பயன்படுத்தி அதிதேவர் நாராயணரின் ஆத்மா பிறவியெடுத்தது

அதனால் அவர்களுக்கு தகப்பனின் ஆதிக்கம் கிடையாது

இது ஒரு பக்கம் இருக்க ; யசோதைக்கும் கிறிஷ்னருக்கும் உள்ள பிணைப்பு ; மகிமை வேறு யாருக்கும் கிடையாது

ராமாவதாரத்தில் கோசலை பெற்றாளே தவிர வளர்த்தவள் ஆளாக்கியவள் அனைத்துமே கைகேயியே ஆகும்

அவள் யுத்த கலைகளிலும் வல்லவள்

மாபெரும் யுத்தம் ஒன்றில் தசரதருக்கு ரதம் ஒட்டி உயிரை காத்து யுத்தத்திலும் ஜெயம் பெற வைத்தவள் கைகேயி

அரசியாக அனைத்தையும் நிர்வாகம் செய்தவளூம் அவளே
கூனியின் தூண்டுதலால் அவள் ராமர் வனவாசம் போகட்டும் என்று உத்தரவு இட்டாலும் உள்ளார்ந்த அன்பால் அவள் புழுங்கி செத்தவள்

ராமருக்கும் அவள் மீது அலாதி பிரியம்

ஆனால் விதியின் கருவியாகிய கைகேயி உலகத்தால் தூற்றப்பட்டவள் ஆனாள்

அவளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவே ; தேவகி வயிற்றில் பிறந்தாலும் கைகேயின் மறுபிறவி யசோதையிடம் ஓட்டிக்கொண்டு அவளை மகிழ்ச்சி படுத்தினார் ராமர் @ கிறிஷ்ணர்

இது இப்படியிருக்க அந்தக்குழந்தையை கொல்ல பல முயற்சிகள் எடுத்தும் வெற்றி பெறாததால் அதன் புகழ் கம்ஸனின் வயிற்றில் நெருப்பாக நின்றது என்கிறாள் கோதை அக்கா

கிறிஷ்ண லீலைகள் என்கிறார்களே அவைகளை கேட்பதுவும் ஹரிநாம பஜனை பாடுவதும் கலியுகத்தில் மேன்மை பயப்பவை

கோதை அக்கா நம்பிக்கை ஊட்டுகிறாள்

கிறிஷ்ணரை நெருங்கி வந்தால் ; திருத்தக்க செல்வம் கொடுப்பார்

அவரை சேவித்துக்கொண்டு வருத்தம் நீங்கி மகிழ்ந்திருக்கலாம்

No comments:

Post a Comment