Total Pageviews

Tuesday 31 December 2019

திருப்பாவை 3


உலகளந்த பெருமாள் உலகளந்த பெருமாள் என்பதை ஓங்கி உலகளந்த உத்தமன் என ஏன் அழைக்கிறாள் கோதை அக்கா ?

ஓங்கி என்றால் பலத்தை பிரயோகித்தல் அடக்குதல் என்பதாம்

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுன்னு கேள்விப்பட்டிருப்பீர்களே

பெருமாள் யாரை அடக்கினார் எதற்காக அடக்கினார் ?

மகாபலி சக்கரவர்த்திக்கு தானம் செய்கிறேன் என்ற சுயமகிமையே தடையாகி விடுகிறது . சுயத்தை நிக்கிரகம் செய்தால் ஒழிய அவருக்கு முழுமை கொடுக்க முடியாது . ஆகவே திரிவிக்ரமனாக வந்த பரமாத்மா ; ஜீவாத்மாவின் ஆணவம் , கன்மம் , மாயைகளை வெற்றிகொள்ள மூவடி யாசகம் கேட்கிறார்

சிறுவனுக்கு மூவடிதானே என தானம் கொடுத்து விடுகிறார் மகாபலி

ஒரே அடியில் உலகம் முழுவதும் அளந்தார் . அடுத்த அடியிலோ பிரபஞ்சம் முழுவதும் அளந்து விட்டார் மூன்றாவது அடிக்கோ இடமில்லை . தன்னை அவருக்கு கீழ்படிதலுள்ளவானாகி தன் தலையில் பாதம் வைக்கும்படியாக - அவரின் பாதத்தில் ஒன்றுவதைத்தவிர வேறு வழி இல்லாமல்போகிறது .

சித்தி வளாகத்தில் தான் சித்தி ஆகும் நாளை முன்குறித்து விட்டார் வள்ளல் பெருமான்

பிரியாவிடை போல பேருபதேசமும் செய்தாயிற்று

எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டன

ஆனாலும் ஆண்டவர் என்னை வெட்கப்படுத்த மாட்டார் என்ற வாசகம் வள்ளல் பெருமானிடமிருந்து வருகிறது

அது எவ்வளவுதான் வல்லமை வாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் கொடுத்த இறைவனே பெரியவர் என்பதாகும்

கொடுத்தவர் நினைத்தால் திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்

உள்ளார்ந்த சரணாகதியை வெளிப்படுத்தியவர் வள்ளலார்

ஏற்கனவே ஒளிசரீரம் பெற்று பரலோகத்தில் இருந்தவர் வள்ளலார் என்ற குடமுழுக்கு யோவான் ; எலியா என்ற ஞானியாக இருந்த சமயத்தில் நித்திய ஜீவனை பெற்றவர்

மரணமில்லா பெருவாழ்வு ; ஆண்டவர் வருகை பற்றி சைவர்களுக்கு அறிவிக்க இறைவனால் தமிழ்கத்திற்கு அனுப்பட்டவர்

அவரே என்னை இறைவன் வெட்கப்பட வைக்க மாட்டார் என நம்புகிறேன் என்று சொன்னால் நம்மைப்போன்ற சாதாரண ஆட்கள் எவ்வளவு சரணாகதி தத்துவத்தை கற்றுக்கொள்ள வேண்டும்

சித்தி அடைவதற்கு புண்ணியமும் தடை ஆகி விடும் ; பாவம் எவ்வளவு தடையோ அவ்வளவு புண்ணியமும் தடை ஆகிவிடும்

புண்ணியத்தை இறைவனுக்கே அர்ப்பணித்து விட்டு சாந்தியாக வேண்டும்

நன்மை தீமைகளை கடந்து விட வேண்டும்

இருமைகளை கடந்து விடு என்று கீதை உபதேசிக்கிறது

எல்லா புகழும் இறைவனுக்கே

எதையும் திருடிக்கொள்ளாதே

என் குருநாதர்களுள் ஒருவரான நாமக்கல் மகானை சென்று தரிசித்த போது எனக்கு அவர் கைப்பட தேநீர் போட்டு கொடுத்தார் . பேசிக்கொண்டே காலி கிளாசை அவரிடம் நீட்ட எத்தனித்து அவர் திடுக்கிட்டதுபோல கண்டு எழுந்து சென்று கழுவி வைத்தேன்

அவர் காலடியில் அமர்ந்தேன்

உபதேசித்துவிட்டு திருக்கோவிலூர் செல் என்றார்

உடனே புறப்பட்டு திருக்கோவிலூர் வந்து ஊர் முழுக்க சுற்றினேன்

ஆதியிலே மண்டுக முனிவரின் ஆசிரமம் இருந்த இடம்

மண்டு என்றால் முட்டாள்

முட்டாள் முனிவராக ; குருவாக உயர்ந்த இடம்

மகாபலி சக்ரவர்த்தியின் கர்வத்தை கருவறுத்தவராக நாராயணன்

அந்தகார அசுரனை அழித்தவராக சிவபெருமான்

மத்வ முனிவர் ஒருவரின் ஜீவசமாதி

மெய்ப்பொருள் நாயனார் சமாதி

முதல் ஆழ்வார்கள் மூவர் சம காலத்தில் தமிழகத்தில் இருந்தாலும் அவர்கள் தற்செயலாக ஒரு குறுகிய கீற்று கொட்டாகையில் மழைக்கு ஒதுங்கிய ஊர் திருக்கோவிலூர்

அருவமான ஒருவர் நாலாவதாக தங்களை நெருக்குவதை உணர்ந்து நாராயணனே வந்திருப்பவர் என உணர்கிறார்கள்

பாசுரம் பாட தொடங்குகிறார்கள்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே - (பொய்கையார்)

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் (பூதத்தாழ்வார்)

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் – செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்
என்ஆழி வண்ணன்பால் இன்று (பேயாழ்வார்)

ஆழ்வார்கள் பாசுரம் பாடி தமிழையும் பக்தியையும் வளர்த்தார்களே ; அதில் முதல் மூன்று பாசுரம் பாடப்பட்ட ஊர் திருக்கோவிலூர்

பாடவைத்தவர் பரமாத்மா

இப்பேற்பட்ட அந்த புண்ணிய ஷேத்ரத்தின் உபதேசம் சுயத்தை விட்டு விடு ; சரணாகதியை கற்றுக்கொள் என்பதாகும்

எந்த பெருமையையும் இறைவனுக்கே அர்ப்பணித்து விடு ; திருடிக்கொள்ளாதே என்பதாகும்

அந்த உத்தமனின் பேர் பாடி நமது ஆத்மாவுக்கு சரணாகதியை உபதேசித்தால் அருட்செல்வமும் பொருட்செல்வமும் நிறைந்தவராக உயர்வோம்

No comments:

Post a Comment