Total Pageviews

668

Tuesday, 31 December 2019

திருப்பாவை 10








மைத்துனி என்பதை அம்மனாய் என்கிறாள் அக்கா

சுபத்ரை என்ற பெயரே சுவர்க்கம் புகுவதற்கு தகுதியானவள் என்கிறது

கிறிஸ்ணருக்கு தங்கையானவள் ; பலராமனுக்கு உடன்பிறந்தவள்

ஆகவே அவள் வாழ்வே அவளுக்கு நோன்புநோற்கும் தகுதியை கொடுத்துவிடுகிறது

நரன் எனப்பட்ட சின்ன சிவன் அர்ச்சுணனுக்கு வாக்கப்பட்டவள்

கலியுகத்தின் முதல் பேரரசன் பரிஸித்தின் தாயானவள்

குந்தி மற்றும் காந்தாரிக்கு பிறகு ராஜமாதாவாக அலங்கரிக்கப்பட்டவள்

ராஜமாதா சுபத்ரை என்பதைத்தான் நின்று சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய் என கோதை அக்கா விளிக்கிறாள்

நறுமணம் வீசும் துளசியை விரும்புகிற நாராயணன் நம் நோன்புக்கு நன்மை தராமல் போவானா ; நம்பிக்கையோடு தாழ்திறப்பாயாக

முன்பு ராம்பாணத்துக்கு பலியான கும்பகர்ணன் தூக்கத்தை உன்னிடம் கொடுத்துவிட்டானா

ஆற்றல் நிறைந்த போர்க்கப்பல் போன்ற பலராமனை (ஆதிசேஷனின் அம்சமானவரை ) அண்ணனாக அமஅமைந்தவளே

எங்களுக்கு நம்பிக்கையூட்ட வந்து கதவை திறப்பாயாக

No comments:

Post a Comment