Total Pageviews

Tuesday 31 December 2019

திருப்பாவை 1







சீதாபிராட்டியாரே கோதை அக்காவாக பூமாதேவியாரால் வெளிப்படுத்தப்பட்டார்

ஏனெனில் சீதை நோவுகள் தாளாமலேயே தன்னை ஏற்றுக்கொள்ளும்படியாக மன்றாடி பூமி பிளந்து அவரை ஏற்றுக்கொண்டது

மனிதகுலம் பூமியில் செய்துவரும் அக்கிரம்ங்களுக்கு படைப்புகள் அனைத்தையும் தனக்குள்ளிருந்து வெளிப்படுத்தும் பரமாத்மாவும் பொறுப்பேற்றாக வேண்டும்

சகலமும் அவருக்குள்ளிருந்து வெளிப்பட்டு அவருக்குள்ளேயே கிரியை செய்தும் வருகின்றன

1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.--யோவான் 1

2:117. அல்லாஹ் வானங்களையும், பூமியையும் இல்லாமையிலிருந்தே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது

36:82. எப்பொருளையேனும் அவன் படைக்க நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது

ஒன்றுமே இல்லாத வெட்ட வெளியே சகல பிரபஞ்சத்திற்கும் வெளியே இருக்கிறது என விஞ்ஞானத்தால் அறிகிறோம்

உலகில் வந்த சகல வேதங்களும் வெட்டவெளியே ஆதி இறைவன் என அறிவிக்கின்றன

சிவவாக்கியர் 534:

கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும்
வெட்ட வெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே.

சிவபோகசாரம் ; உபநிஷத்துககள் இன்னபிறவைகளிலும் உள்ளன

சிவாலயங்களில் லிங்கம் என்பதே அருவமும் உருவமும் இணைந்த ஒன்றாகும்

அருஉருவம் என்பார்கள்

சிவலிங்கம் என்றால் சிவனின் நாமத்தால் அருவத்தை வழிபடுகிறேன் என்பதே அர்த்தம்

அருவமான இறைவன் உருவமான படைப்புகளை படைத்த போது அவர் செய்ததெல்லாம் உண்டாகட்டும் என்று பேசினார்

அருவத்தில் இருந்து முதலில் வந்தது சத்தம் ; பிரணவம்

அதாவது வார்த்தை ; அந்த வார்த்தையே நாராயணன் ; படைப்புகளாக விரிந்தவன் ; பரமாத்மா ; பிரபஞ்சம்

இந்த பிரபஞ்சத்தில் ஜடமும் இயங்கும் பொருட்களும் கலந்தே இருக்கின்றன என்பதால் நாராயணனை அறிதுயில் கொள்ளுகிறவனாக ; பள்ளிகொண்டவனாக உருவம் சமைத்தார்கள்

ஆகவேதான் சகல பாவங்களுக்கும் தானும் பொறுப்பேற்று ஒவ்வொரு அவதாரத்திலும் துன்பத்தை சுமந்தே தீர்த்தும் வருகிறார்

ராமாவதாரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பூமியில் அவர் தர்மத்தை நிலைநிறுத்தினார்

அவரது சொந்த வாழ்க்கையோ இன்பம் என்பது அறவே இல்லை

மனைவியை மக்களை பிரிந்தே வாழ்ந்தார்

சீதை துன்பத்தை தவிர எதையுமே அனுபவித்ததில்லை

ஆனாலும் அவள் மனித பிறவி எடுத்த நிலையிலிருந்து மீண்டும் தேவராக மாற ஸ்ரீவில்லி யில்  கோதையாக தன்னை வெளிப்படுத்தி தமிழால் பாடி மகிழ்ந்து ஸ்ரீரெங்கத்தில் ஒளிசரீரம் பெற்றாள்

கோதை அக்கா தமிழுக்கு கிடைத்த வரம்

வைணவத்தில் மனிதனாக பிறந்த யாருக்கும் கருவறையில் இடம் இல்லை

ஆனால் வைணவம் கோதையே சீதை என்றறிந்து கோவிலில் வைத்தார்கள்

அந்த முதல் கோவில் மதுரை கூடல் அழகிய பெருமாள் கோவிலில் உள்ளது

ஸ்ரீவில்லியில் இருந்து ஸ்ரீரெங்கம் செல்ல பல்லக்கு பரிவாரம் தந்தவன் பாண்டிய மன்னன்

அழகர் மலையில் ஒரு மண்டலம் தங்கி தன் கைப்பட அழகனுக்கு சேவை செய்தாள் கோதை அக்கா

மதுரைக்கு அருகிலுள்ள சோழவந்தான் என்ற ஊர் வைகை என்ற வேகவதி கரையில் உள்ளது . அங்கு உள்ள தெய்வங்களுக்கு ஜனகை ஜனகை என முன் இணைப்பு இருக்கும்

ஜனகை பெருமாள் ; ஜனகை மாரியம்மன்  என இருக்கும்

இரண்டாம் யுகத்தில் மிதிலை என்பது வேகவதி கரையில் இருந்த சோழவந்தனாகத்தான் இருந்தது ; சீதையை மனம் முடிக்க சோழ வம்ஸத்து ராமன் வந்ததால் இவ்வூரின் பெயர் சோழவந்தான் என ஆனது

இலங்கையில் படகில் வைத்து கடலில் விடப்பட்ட பேழை கங்கைக்கு செல்ல வாய்ப்பே இல்லை

ஆனால் அருகில் கடலில் கலக்கும் வைகை வழியாக சோழவந்தானில் கரையேறவே வாய்ப்பு உள்ளது

ஆகவேதான் அவள் தமிழச்சியாகவே வந்தாள்

தமிழ் வார்த்தைகள் அவளிடம் கொஞ்சி விளையாடுவதை திருப்பாவை முழுவதும் காணலாம்

துன்பம் தீர நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மையிட்டு எழுதோம் என்ற விரதத்தை மார்கழியில் கடைபிடிக்க பெண்களுக்கு வழிகாட்டினாள்

அவளுக்கு தெரிந்த இன்னொரு ரகசியத்தை இப்பாடலில் வெளிப்படுத்தியுமுள்ளாள்

ராமரை காட்டுக்கு அனுப்பியதால் கைகேயியை பலரும் அறுவறுத்தார்கள் ; ஆனால் அன்பால் வளர்த்தவளை ராமன் மதிக்காமலில்லை

ஆகவேதான் கிறிஷ்ணாவதாரத்தில் தேவகியின் வயிற்றில் பிறந்தாலும் வளர்ப்பு தாயான யசோதைக்குத்தான் மரியாதை

என்ன தவம் செய்தனை யசோதா ; எங்கும் நிறைந்த பர பிரம்மம் அம்மா என்றழைக்க

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் என்கிறாள் கோதை அக்கா

ஓம் நமோ நாராயணாய

நாராயணனாக வெளிப்பட்ட அந்த ஓர் இறைவனையே நமஸ்கரிக்கிறோம்





திருப்பாவை 2


வையத்து வாழும் மனிதர்களாகிய சிறுவர்களுக்கு தாம் கொடுக்கும் செயல்முறை வேதாந்த உபதேசங்கள் திருப்பாவை என்கிறார் கோதை அக்கா

பாவை என்றால் பருவவயதை தொடாத பெண்பிள்ளை என்பதாம்

கள்ளம் கபடம் பேதம் உணராதவள்

பதின் ..
பத்து வயது சிறுமி!
பருவம் எய்தா .
பூப்பெய்தா சிறுமி

ஆன்ம வாழ்வில் அறியாமையால் ஆத்மாக்கள் உழன்று வருகின்றன

மார்க்கத்துக்கு ஒரு கடவுள் இருப்பதாகவும் எங்காளுதான் ஒரிஜினல் எனவும் சிறுவர்கள் நிணைக்கிறார்கள்

திருப்பாவையும் திருவெம்பாவையும் இறைவன் ஒருவனே என சிறுவர்களுக்கு செப்புகின்றன

சீர்மல்கும் ஆய்பாடி செல்வ சிறுமீர்காள் என முதல் பாடலிலேயே அக்கா சுட்டுகிறாள்

திருப்பாவை 30 ம் ஏலோரெம்பாவாய் என என் பாவையே என சிறுமியர்க்கு அறிவுரையாகவே பகரப்பட்டுள்ளது

திருவெம்பாவை 15 ம் ஏலோரெம்பாவாய் என என் பாவையே என சிறுமியர்க்கு அறிவுரையாகவே பகரப்பட்டுள்ளது

ஏல் ஓர் எம் பாவாய் என்பதே ஏலோரெம்பாவாய் என சொற்றொடர் ஆயிற்று

ஏல் என்றால் யூதபாஷையில் இறைவன்

என் மகளே இறைவன் ஒருவனே என்பாயாக என்பதே ஏலோரெம்பாவாய் சொற்றொடரின் அர்த்தம் - பரிபாஷை

கோதை அக்கா ராமானுஜர் போன்ற பெரியவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஜோதியாக மாறி மறைந்து போனவர்

அவர் உடலோ ; சாம்பலோ கிடைக்கவில்லையே

அதேபோல சிதம்பரத்து பூசாரிகள் பலர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஜோதியாக மாறி மறைந்து போனவர்

அவர் உடலோ ; சாம்பலோ கிடைக்கவில்லையே

ஸ்தூல உடம்பை ஒளி சரீரமாக மாற்றும் தகுதி பெற்றோர் மரணமில்லா பெரு வாழ்வு என்ற தேவராக மாறுகிறார்கள் என வள்ளல் பெருமான் இதற்கு விளக்கம் கொடுத்தார்கள்

மனிதர்கள் அடையக் கூடிய உண்ணத நிலையை அடைந்தவர்கள் ஆண்டாளும் மாணிக்க வாசகரும்

இருவரும் சித்தி அடையும் முன்பு பாடியவையே ஏலோரெம்பாவாய் பாடல்கள்

கோவிலில் பூசாரி தீபாராதனை செய்யும் போது வழிபாடு செய்வது சரியை என்ற தாழ்ந்த நிலை

அப்படியில்லாமல் செய்கையால் ; உழைப்பால் ; வாழ்வால் இறைவனை நோக்கி வளர்வது கிரியை

உலகத்தார் உய்யுமாறு எண்ணி நான் கொடுத்த கிரியை பாவை நோன்பு என்கிறார் கோதை அக்கா

தேவர்களுக்கு அதிகாலை ஆகிய மார்கழி மாதம் முழுதும் அதிகாலை நீராடி அலங்காரங்களை தவிர்த்து தூய்மை விரதங்களை மனிதர்கள் மேற்கொள்ள வேண்டும்

பால் வெளி மண்டலத்தில் பிரபஞ்சம் மெல்ல இயங்கிக்கொண்டுள்ளது ; ஆனால் பிரபஞ்சம் ஜடாப்பொருளால் ஆனது

ஜடமாக இருந்தாலும் இயங்கிக்கொண்டுள்ளது

அவனே பரமன் - பரமாத்மா

அவன் சகலவற்றிக்கும் அடைப்படை - ஆதிமூலமாக இருப்பவன்

அவனை சற்குருவாக வைத்து இறைவனை தொழுதுகொள்ள வேண்டும்

ஏனென்றால் இறைவனின் வார்த்தை ஆனவன் நாராயணன்

உலகம் உய்யுமாறு காலம் காலமாக நாட்டுக்கு நாடு ஆங்காங்கு பகுதி பகுதியாக வேத ஆகமங்களை இறைவனே கொடுத்து வருகிறார்

அந்த வேதங்களை இறக்குபவர் நாராயணன் - ஜிப்ராயீல் - காப்ரியேல் என்ற அதிதேவர் என குரானிலும் பைபிளிலும் கூட சொல்லப்பட்டுள்ளது

ஆனால் கலிகாலம் முடியாததால் ; சத்திய யுகத்திற்கான காலம் கனியாததால் முழுமையான சமரச வேதம் வெளியாக்கப்படவில்லை

நாட்டுக்கு நாடு சமுதாய பண்பாடுகள் மாறுபாடானவை ஆதலால் அவர்களுக்குக்காக கொடுக்கப்பட்ட வேதத்தை அடுத்த நாட்டில் கொண்டுவந்து திணித்து மல்லுக்கட்டிக்கொண்டு மனித சிறுவர்கள் மண்டைகளை உடைக்கிறார்கள்

ஆனால் ஐயங்களை தீர்த்து அருளை கருணை கொடையாக்கி சமாதானம் சாந்தியை நிலை நிறுத்தும் சமரச வேதம் விரைவில் வெளியரங்கமாகும்

திருப்பாவை 3


உலகளந்த பெருமாள் உலகளந்த பெருமாள் என்பதை ஓங்கி உலகளந்த உத்தமன் என ஏன் அழைக்கிறாள் கோதை அக்கா ?

ஓங்கி என்றால் பலத்தை பிரயோகித்தல் அடக்குதல் என்பதாம்

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுன்னு கேள்விப்பட்டிருப்பீர்களே

பெருமாள் யாரை அடக்கினார் எதற்காக அடக்கினார் ?

மகாபலி சக்கரவர்த்திக்கு தானம் செய்கிறேன் என்ற சுயமகிமையே தடையாகி விடுகிறது . சுயத்தை நிக்கிரகம் செய்தால் ஒழிய அவருக்கு முழுமை கொடுக்க முடியாது . ஆகவே திரிவிக்ரமனாக வந்த பரமாத்மா ; ஜீவாத்மாவின் ஆணவம் , கன்மம் , மாயைகளை வெற்றிகொள்ள மூவடி யாசகம் கேட்கிறார்

சிறுவனுக்கு மூவடிதானே என தானம் கொடுத்து விடுகிறார் மகாபலி

ஒரே அடியில் உலகம் முழுவதும் அளந்தார் . அடுத்த அடியிலோ பிரபஞ்சம் முழுவதும் அளந்து விட்டார் மூன்றாவது அடிக்கோ இடமில்லை . தன்னை அவருக்கு கீழ்படிதலுள்ளவானாகி தன் தலையில் பாதம் வைக்கும்படியாக - அவரின் பாதத்தில் ஒன்றுவதைத்தவிர வேறு வழி இல்லாமல்போகிறது .

சித்தி வளாகத்தில் தான் சித்தி ஆகும் நாளை முன்குறித்து விட்டார் வள்ளல் பெருமான்

பிரியாவிடை போல பேருபதேசமும் செய்தாயிற்று

எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டன

ஆனாலும் ஆண்டவர் என்னை வெட்கப்படுத்த மாட்டார் என்ற வாசகம் வள்ளல் பெருமானிடமிருந்து வருகிறது

அது எவ்வளவுதான் வல்லமை வாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் கொடுத்த இறைவனே பெரியவர் என்பதாகும்

கொடுத்தவர் நினைத்தால் திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்

உள்ளார்ந்த சரணாகதியை வெளிப்படுத்தியவர் வள்ளலார்

ஏற்கனவே ஒளிசரீரம் பெற்று பரலோகத்தில் இருந்தவர் வள்ளலார் என்ற குடமுழுக்கு யோவான் ; எலியா என்ற ஞானியாக இருந்த சமயத்தில் நித்திய ஜீவனை பெற்றவர்

மரணமில்லா பெருவாழ்வு ; ஆண்டவர் வருகை பற்றி சைவர்களுக்கு அறிவிக்க இறைவனால் தமிழ்கத்திற்கு அனுப்பட்டவர்

அவரே என்னை இறைவன் வெட்கப்பட வைக்க மாட்டார் என நம்புகிறேன் என்று சொன்னால் நம்மைப்போன்ற சாதாரண ஆட்கள் எவ்வளவு சரணாகதி தத்துவத்தை கற்றுக்கொள்ள வேண்டும்

சித்தி அடைவதற்கு புண்ணியமும் தடை ஆகி விடும் ; பாவம் எவ்வளவு தடையோ அவ்வளவு புண்ணியமும் தடை ஆகிவிடும்

புண்ணியத்தை இறைவனுக்கே அர்ப்பணித்து விட்டு சாந்தியாக வேண்டும்

நன்மை தீமைகளை கடந்து விட வேண்டும்

இருமைகளை கடந்து விடு என்று கீதை உபதேசிக்கிறது

எல்லா புகழும் இறைவனுக்கே

எதையும் திருடிக்கொள்ளாதே

என் குருநாதர்களுள் ஒருவரான நாமக்கல் மகானை சென்று தரிசித்த போது எனக்கு அவர் கைப்பட தேநீர் போட்டு கொடுத்தார் . பேசிக்கொண்டே காலி கிளாசை அவரிடம் நீட்ட எத்தனித்து அவர் திடுக்கிட்டதுபோல கண்டு எழுந்து சென்று கழுவி வைத்தேன்

அவர் காலடியில் அமர்ந்தேன்

உபதேசித்துவிட்டு திருக்கோவிலூர் செல் என்றார்

உடனே புறப்பட்டு திருக்கோவிலூர் வந்து ஊர் முழுக்க சுற்றினேன்

ஆதியிலே மண்டுக முனிவரின் ஆசிரமம் இருந்த இடம்

மண்டு என்றால் முட்டாள்

முட்டாள் முனிவராக ; குருவாக உயர்ந்த இடம்

மகாபலி சக்ரவர்த்தியின் கர்வத்தை கருவறுத்தவராக நாராயணன்

அந்தகார அசுரனை அழித்தவராக சிவபெருமான்

மத்வ முனிவர் ஒருவரின் ஜீவசமாதி

மெய்ப்பொருள் நாயனார் சமாதி

முதல் ஆழ்வார்கள் மூவர் சம காலத்தில் தமிழகத்தில் இருந்தாலும் அவர்கள் தற்செயலாக ஒரு குறுகிய கீற்று கொட்டாகையில் மழைக்கு ஒதுங்கிய ஊர் திருக்கோவிலூர்

அருவமான ஒருவர் நாலாவதாக தங்களை நெருக்குவதை உணர்ந்து நாராயணனே வந்திருப்பவர் என உணர்கிறார்கள்

பாசுரம் பாட தொடங்குகிறார்கள்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே - (பொய்கையார்)

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் (பூதத்தாழ்வார்)

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் – செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்
என்ஆழி வண்ணன்பால் இன்று (பேயாழ்வார்)

ஆழ்வார்கள் பாசுரம் பாடி தமிழையும் பக்தியையும் வளர்த்தார்களே ; அதில் முதல் மூன்று பாசுரம் பாடப்பட்ட ஊர் திருக்கோவிலூர்

பாடவைத்தவர் பரமாத்மா

இப்பேற்பட்ட அந்த புண்ணிய ஷேத்ரத்தின் உபதேசம் சுயத்தை விட்டு விடு ; சரணாகதியை கற்றுக்கொள் என்பதாகும்

எந்த பெருமையையும் இறைவனுக்கே அர்ப்பணித்து விடு ; திருடிக்கொள்ளாதே என்பதாகும்

அந்த உத்தமனின் பேர் பாடி நமது ஆத்மாவுக்கு சரணாகதியை உபதேசித்தால் அருட்செல்வமும் பொருட்செல்வமும் நிறைந்தவராக உயர்வோம்

திருப்பாவை 4






மழைக்கு என்று ஒரு தேவர் இருக்கிறார் ; அவர் பெயர் வருணன்

அப்படியிருக்க மழையை கண்ணன் என்றே உருவகப்படுத்துகிறாளே கோதை அக்கா ?

இந்த கலிக்காலத்தில் ஒழுங்காக மழை பெய்யாது என்பதால் ஆழி மழையாகிய கண்ணா ; கரவேல் ; ஏமாத்தாதே என்று சொல்கிறாள்

விஞ்ஞானம் கடல் நீர் ஆவியாகி மேகமாக மாறுகிறது என்கிறது

அப்படியானால் கடந்த வருடங்களில் வெயில் கொளுத்தோ கொளுத்தோ என கொளுத்தியும் மேகம் உருவாகவில்லை

கோதை அக்கா சொல்கிறாள் : கிறிஷ்ணரின் கரம் கடல் தண்ணீரை முகர்ந்து வானத்தில் ஏற்றி விடுகிறதாம்

யுகங்களை மாற்றும் அதிகாரம் பெற்றவர்கள் நர நாரணர்கள் ; அதில் முதல்வன் நாராயணன் ; ஊழி முதல்வன்

அவன் நிறம் போல மேகம் கருத்து அவன் கையில் உள்ள சக்ராயுதம் போல மின்னி சங்கு போல அதிர்ந்து இடி இடித்து ; அவனது வில்லாகிய சாரங்கத்திலிருந்து புறப்படும் அம்புகள் போல மழை பெய்கிறதாம்

வருணன் என்றொரு மழைத்தேவர் இருப்பதையே மறைத்து ; எல்லாமே நாராயணன் என்கிறாளே அக்கா

இதன் செய்தி என்னவென்றால் ; அது வைணவத்தில் உள்ள ஏக வழிபாட்டு கொள்கை

ஏக இறைவழிபாடு ; ஏக இறைவழிபாடு என்று இசுலாமியர் ; சன்மார்க்கிக்களும் சொல்கிறார்களே ; வைணவமும் ஏக வழிபாட்டு கொள்கையில் உள்ளதுதான்


சகல தேவர்களும் நாராயணனிலிருந்தே வியாகப்பட்டுள்ளனர்

அவர்கள் தனித்த பிரகிரதிகளாக இருந்தாலும் நாராயணனுக்குள் அடக்கம்

ஆகவே நாராயணனை வழிபட்டாலே எல்லா தேவர்களையும் வழிபட்டதாகி விடுகிறது

தேவர்களுக்கென்று தனி வழிபாடு அவசியமில்லை

ஆதி காலங்களில் இந்திரவழிபாடும் வருண வழிபாடும் தனியாக செய்யப்பட்டும் வந்தன

வருணனும் தேவர்களின் தலைவரான இந்திரனும் இரட்டையர்கள்

ஆகவேதான் மழைக்கு என்று வருண ஜெபமும் ; இந்திர வழிபாடும் நடத்தப்பட்டதை சிலப்பதிகாரத்தில் காணலாம்

இந்திர வழிபாடு ஸ்ரீகிறிஷ்ணரின் காலத்தில்தான் முதல் முதலில் நிறுத்தப்பட்டது

பாகவதத்தில் இந்நிகழ்வு சொல்லப்ப
ட்டுள்ளது

நாராயணனே முழுமையாக அவதாரமாக வந்தது கிறிஷ்ணாவாதாரம்

ஆனால் அந்த விபரம் இந்திரன் அறியவில்லை

ஆகவே கிறிஷ்ணரை சோதிக்க விரும்பி அவர் மாடு மேய்த்தபோது பெருமழை பெய்வித்தனர் இந்திரனும் வருணனும்

கிறிஸ்ணரோ அங்கிருந்த மலையையே பெயர்த்து ஒரு விரலில் குடை பிடித்தார்

அதில் ஒதுங்கி பசுக்களும் மாடுகளும் ஆயர்களும் கழித்தனர்

தங்கள் பலம் செயலற்றுபோன பிறகே தாங்கள் யார் என வேண்டி நின்று நாராயணன் என அறிந்தனர்

அன்றுமுதல் இந்திரவிழா நிறுத்தப்படுவதாக கிறிஸ்ணர் அறிவித்தார்

தேவர்களின் தலைவரான இந்திரனுக்கோ ; படைப்பு தொழிலை செய்யும் பிரம்மனுக்கோ தனி கோவில் ; மரியாதைகள் வைணவத்தில் கிடையாது

ஏனென்றால் அதிதேவரான நாராயணனுக்குள் தேவர்கள் அனைவரும் அடக்கம்

பசுக்களை காத்ததால் மட்டுமே அல்ல ; இந்திரனுக்கும் வருணனுக்கும் வழிபாட்டை நிறுத்தியவர் கோவர்த்தன் என்பதை உணரவேண்டும்

கோ என்றால் பசு என்பது மட்டுமல்ல கோ என்றால் அரசனையும் குறிக்கும்

தேவர்களின் அதிபதி ; அதிதேவர் நாராயணன் ஒருவரே

தேவர்கள் மட்டுமல்ல ; அசுரர்களின் அதிபதி கருப்பசாமியும் அவரது அம்ஸமே

கருப்பசாமியை சைவர்கள் ; சக்தி வழிபாட்டுக்காரர்கள் கொண்டாடுவதால் அவரை சிவ அம்சம் என தவறாக கருதிக்கொள்கிறார்கள்

உண்மையில் கருப்பசாமி நாராயண அம்சம்

நல்ல அண்ணன் ; கெட்ட அண்ணன் என நாராயணிக்கு இரண்டு அண்ணன்மார்

சிவனை அங்கீகரித்த அண்ணன் திருமால் என்றால் சிவனை அங்கீகரிக்காத அண்ணன் கருப்பசாமி

திருமணத்திற்கு முந்திய நிலையில் அண்ணையை காக்கிறவர் என்ற போர்வையில் கண்ணை திரட்டிக்கொண்டு கத்தியை தூக்கிக்கொண்டு நிற்பார் கருப்பசாமி

கண்ணிமார் கருப்பசாமி கோவிலாகத்தான் கிராம கோவில்கள் இருக்கும்

அது ஏதென்றால் தேவர்களும் அசுரர்களும் நாராயணனிலிருந்தே வந்துள்ளனர்

தேவர்கள் அசுரர்களை அடையாளம் காண வேண்டும் என்றால் நான் சொல்லும் எளிய சூத்திரம் சிவனை அங்கீகரித்தால் தேவர்கள் ; எதிர்த்தால் அசுரர்கள்

ஆக்வேதான் நீதிமான்களும் ; பக்திமான்களும் ஆன வைணவர்கள் ; சன்மார்க்கிக்கள் ; இசுலாமியர் பலரும் சிவனை அங்கீகரிக்க தெரியாததால் இன்னும் அசுரர்கள் கணக்கிலேயே இருக்கிறீர்கள் என நான் சொல்வதுண்டு

இந்த ரெண்டும்கெட்டான் நபர்களுக்கு வேதம் தைத்ரியர்கள் என்ற பெயரே வைத்திருக்கிறது

பிரகலாதனை வேதம் தைத்ரியன் என்று சொல்லும்

சிவனை அங்கீகரிக்க தெரியாத பிரகலாதனை காக்க நரசிம்ஹ அவதாரம் வந்தது ; ஆனால் சாரபேஸ்வரராக சிவன் வந்து அவரை வாதித்தார் என்பார்கள்

ராமரையோ ; கிறிஷ்னரையோ ; இயேசுவையோ வாதிக்கும்படியாக சிவன் வரவில்லை

காரணம் அவர்கள் மனித குமாரர்களாக பூமியில் வந்தார்கள்

மனிதர்கள் அனைவரும் சிவனின் அம்ஸமானவர்கள்

தசரத குமாரன் ; நந்த குமாரன் என்றே அடையாளப்படுத்தப்பட்டனர்

இயேசுவை மற்றவர்கள் தேவகுமாரன் என்றால் அவர் பைபிள் முழுக்க தன்னைப்பற்றி சொல்லும்போது மனுஷகுமாரான் என்றே சொல்லியிருப்பார்

சகல நாமங்களை காட்டிலும் ராமநாமமே சிறந்தது என சிவனாரே சொல்லக்காரணம் நாராயணன் மனிதனாக அவதரித்து வரும்போது அங்கே சிவ நாராயண கலப்பு வந்துவிடுகிறது

மோஹினி அவதாரம் எடுத்த நாராயணனுக்கும் சிவனுக்கும் அய்யப்பன் பிறந்தார் என்ற கதையின் சாரம் இதுவே

நாராயணனும் சிவனும் இணைந்தால் அங்கு முழு வெற்றி ; அருவமான இறைவனின் அதாவ்து அல்லாஹ்வின் முழுமை அங்கு வந்துவிடும்


குரானில் காப்ரியேல் என்ற நாராயணனும் ; மீகாயேல் என்ற சிவனும் எப்போதும் இரட்டையர்களாகவே செயல்படுவது குறிக்கப்பட்டுள்ளது

இந்துமதம் ஏன் இறைவனின் மதம் என நான் இசுலாமியர்க்கும் கிறிஸ்தவர்களுக்கும் சொல்லக்காரணம் அல்லாஹ் வின் அதிதேவர்களான காப்ரியேல் என்ற நாராயணனையும் ; மீகாயேல் என்ற சிவனையும் வழிபடும் மதம் என்பதாலேயே

சைவம் சிவனை மட்டுமே வழிபடுகிறது ; வைணவம் நாராயணனை மட்டுமே வழிபடுகிறது ; இசுலாம் கிறிஸ்தவம் அல்லாஹ்வை மட்டுமே வழிபடுகிறது ; இவை அனைத்தும் எப்படி இறை மார்க்கமாகும் என்பதற்கு விளக்கம் குரானில் உள்ளது

2:285. இறை தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; அவ்வாறே முஃமின்களும் நம்புகின்றனர்; இவர்கள் யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை

4:136. முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய இவ் வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் நம்பாமல் நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார்.

முகமதுநபி மூலமாக வந்த குரானை மட்டுமல்ல ; அதற்கு முன்பு மலக்குகள் (தேவர்கள்) மூலமாக வந்த வேதங்களையும் நம்பவேண்டும் என்பதே குரானின் கட்டளை

இறைதூதர்கள் யாருமே வராத காட்டுமிராண்டிகளான அரபியர்களையும் ரட்சிக்கும்படியாக குரான் வந்ததால் ; அரபியர்களுக்கு மலக்குகள் - தேவர்கள் யார் என்றே தெரியாததால் அல்லாஹ்வைத்தவிர யாரையும் வழிபடாதே என தவறுதலாக புரிந்துகொண்டனர்

ஆனால் குரான் சொல்லுகிறது அல்லாஹ்வை மட்டுமல்ல அவரது மலக்குகளையும் வழிபடவேண்டும்

ஆனால் வழிபாடு இறைவனுக்கு மட்டும்தானே என இசுலாத் மட்டுமல்ல ; சன்மார்க்கிக்கள் கூட சொல்கிறார்களே என்றால் :

இறைவனையும் தேவர்களையும் ஒருவரை ஒருவர் விட்டுவிடாமல் வழிபட வேண்டும் என்று வரப்போகிற சமரச வேதம் வழிகாட்டுகிறது

யாரையெல்லாம் நீங்கள் வழிபடவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவர்கள் நாமத்தால் இறைவா - அல்லாஹ் - அருட்பெருஞ்சோதி என்று வழிபட்டால் அது முழுமையானது

எந்த வேதங்களுக்கும் விரோதமானதல்ல


காலம் கலிகாலம் ஆனதால் இந்த உண்மையை இதுகாறும் இறைவன் வெளிப்படுத்தாது நீங்கள் மண்டைகளை உடைத்துக்கொள்ள இறைவன் விட்டிருந்தார்

சத்திய யுகம் நெருங்கியதால் ; வரப்போகிற சமரச வேதத்தின் முன் அறிவிப்பாளன் என்ற முறையில் அடியேன் அறிவிக்கிறேன்

நாராயணன் நாமத்தாலும் சிவனின் நாமத்தாலும் அல்லாஹ் உங்கள் அறிவுக்கண்களை திறந்தருளட்டும்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
     


திருப்பாவை 5







பரலோகத்தில் - வைகுண்டத்தில் ஒரு நாள் என்பது பூமியில் ஒரு வருடம் !

தேவர்களும் ; ஒளி சரீரம் பெற்று மரணமில்லா பெரு வாழ்வு பெற்ற ஆத்மாக்களும் வாழும் அந்த லோகத்தில் மார்கழி மாதம் முழுவதும் வைகறை பொழுது ! அதாவது அவர்கள் பிரார்த்தனை தியானம் செய்யும் நேரம் !

எனவே இம்மாதம் முழுவதும் புனிதமானது ! பக்தி ; தியானம் ; பிரார்த்தனைக்கு உரியது !

மாகாகுரு ஆண்டாள் - மனிதர்கள் பாடி துதிக்கவும் ; பின்பற்றவும் ; ஞானம் பெறவும் திருப்பாவை அருளினார் !!

அதில் சிறந்த முன் உதாரணம் உள்ளது !!

போய பிழையும் புகுதருவா நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் !!

பாவமன்னிப்பு - சற்குருவாகிய நாராயணனது நாமம் - ராம நாமம் ; கிரிச்னரின் நாமம் ; இயேசுவின் நாமம் சகல பாவங்களையும் தீர்க்கும் !!

இந்தியாவில் திரேதா யுகத்திலும் ; துவாபர யுகத்திலும் வெளியரங்கமான இந்த உண்மை ; வெளிநாடுகளில் வாழும் மற்ற சமுதாயத்திற்கும் இயேசுவின் மூலமாக கலியுகத்தில் வெளிப்படுத்தப்பட்டது !!

வேதம் எதுவும் வெளிப்படுத்தப்படாத ஐரோப்பியர்களுக்கு இயேசுவின் நாமத்தால் - குமாரன் அதாவது ராமன் என்ற நாமத்தால் இந்த உண்மை கடந்து சென்றது

இந்தியாவில் ஸ்ரீ என்றால் இறைவனை குறிக்கும் ; அதுபோல இஸ்ரேலில் ஜெ என்றால் இறைவனை குறிக்கும்

ராம் என்றால் குமாரன் - பிரதிநிதி என்று அர்த்தம்

ஸ்ரீராம் என்பதும் ஜெரோம் என்பதும் ஒரே அர்த்தம் உள்ள சொல் .

இயேசு தன்னை குமாரன் - ராமன் ராமன் என்றுதானே சொல்லிக்கொண்டார்

ராமநாமம் சகல பாவங்களையும் தீர்க்கும்

காசியில் இறப்போரின் காதில் சிவ்னார் ராமா ராமா என்ற மந்திரத்தை ஓதுவாராம்

அதனால் அடுத்த பிறவியில் அந்த ஆத்மாக்கள் ஆன்மீக செறிவுள்ளவர்களாக பிறக்கிறார்களாம்

கலியுகத்தில் ஐரோப்பியர்கள் விஞ்ஞானத்தின் மூலமாக ஆதிக்க சக்தியாக மாறியதால் இந்தியாவில் ஏற்கனவே இருந்த உண்மையை அவர்கள்தான் முதலில் கண்டுபிடித்ததது போல சொல்லிவிட்டார்கள் !

ராமநாமம் சகல பாவங்களையும் தீர்த்து நாம் கடைத்தேற வழிகாட்டும்

விஷ்ணுசகஸ்ரநாமத்தில் பீஷ்மர் பாண்டவர்களுக்கு நாராயணனது ஆயிரம் நாமங்களையும் அவற்றின் மகிமைகளையும் பற்றி உபதேசிக்கிறார்

அதில் வந்து கலந்து கொண்ட சிவ்னார் சொல்கிறார் ; ஆயிரம் நாமங்களையும் விட ராமா ராமா என்ற நாமமே சிறந்தது என்கிறார்

ஸ்ரீராம ராம ரமேதி ரமே ராமே மனோரமே
சகஸ்ரநாம தத்யுல்யம் ராமநாம வராணனே

அதிதேவர் சிவன் திருவாய் மலர்ந்த வாக்கு இது - ஆயிரம் நாமங்களை சங்கல்பம் செய்வதை விட ராமநாமம் ஒன்றே சகல பாவங்களையும் தீர்க்க கூடியாது என்பதுவே இதன் சாரம் !!

இயேசுதான் முந்தய யுகங்களில் ராமராகவும் கிரிச்னராகவும் இந்தியாவில் அவதரித்தார் ; இந்து தர்மம் என்ற செழுமையான வேதம் நிர்மாணித்தார்

வேதமே வராத ஆப்ராகாமிய வாரீசுகளுக்கும் ஐரோப்பியர்களுக்கும் மட்டுமே யூதம் ; கிறிஸ்தவம் ; குரான் !

அவைகள் இந்து தர்மத்தில் வந்து அடங்க வேண்டியவை !

அதற்கான காலகட்டம் - சமரச வேதம் வெளியரங்கமாகும் நாள் நெருங்கிக்கொண்டுள்ளது !

நாரயணன் நாமத்தினாலே கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன் !

நாராயணனாக வெளிப்பட்ட அந்த ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !!

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


 

திருப்பாவை 6




தமிழனாக பிறந்ததற்கு பெருமைப்படவேண்டிய விசயங்கள் பல இருந்தாலும் அவைகளில் மிகவும் முக்கியமான ஒன்று கோதை அக்காவை தமிழச்சியாக பெற்றதுமாகும்

அருள்நிலையில் ஆழ்ந்த சொற்சுவையும் நயமும் பொங்கி வழிவதை எத்தனைமுறையும் ரசிக்கலாம்

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு இயல்புள்ளோர்களை எழுப்புவதாக திருப்பாவை உள்ளது . அந்த நபர்களுக்கு எந்த விசயங்கள் ஆர்வத்தை கொடுக்குமோ அத்தகைய விசயங்களையாக சொல்லி மிக எளிதாக உயர்ந்த ரகசியத்தையும் சொல்லி அவர்கள் உய்வடையும் வழியையும் காட்டியிருப்பார்கள்

இந்தபாடல் பிஞ்சு மனம் கொண்ட பிள்ளைகளுக்கானது .



குழந்தைகளுக்கு கால் கொலுசை மாட்டிவிட்டு அது அங்கும் இங்கும் ஓடும்போது ஜல் ஜல் என எழும்பும் ஒலியை பெரியவர்கள் கேட்டு ரசிப்பார்கள் ; அத்தோடு குழந்தை ஓரிடத்தில் இருக்காது . துங்கிக்கொண்டிருக்கிறது என்று நினைத்தால் அது எப்போது எழும்பும் எதைப்போய் உருட்டும் என எதிர்பார்க்கவே முடியாது . அக்குழந்தை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதையும் வேலை செய்துகொண்டே தாயானவள் கண்கானித்துக்கொள்ளவும் முடியும்

கொலுசின் இசையில் அக்குழந்தையும் இயைந்து மேலும் மேலும் ஆர்வமாக ஓடி ஆடி நடக்க கற்றுக்கொள்ளும் .கொலுசின் இசை பிள்ளைகளுக்கு பிரியமான ஒன்று . அக்காவும் பொங்கி பொங்கி வழிந்து அவ்விடத்தை நிரப்பும் ஒலியை உடைய சிலம்பை அணிந்துள்ள பிள்ளையே என்கிறாள் . புள்ளும் சிலம்பு – புள்ளுதல் என்ற வார்த்தைக்கு எவ்வளவு அர்த்தம் கொள்வது . அது உற்பவித்து நிரப்புதல் மகிழ்ச்சியை வாரி வாரி வழங்குதல் என்பது வரை செல்கிறது . புள்ளும் சிலம்பினகால் புள்ளரையன் கோவில் என்று கோவிலை சுட்டுகிறார் .

தன் உந்திக்கமலத்தில் மகாலக்ஷிமியை உடையவராக வற்றாத செல்வத்தையும் அமரிக்கையான மகிழ்ச்சியையும் கொடுப்பவரான புள்ளரையன் கோவிலைபார் ; அந்தக்கோவிலில் வெள்ளைவிழி யைப்போன்ற சங்கை நீ பார்த்திருப்பாயே . குழந்தைகளுக்கு தன் அன்புக்குறியோரின் கண்கள் மிகவும் பரிச்சியமானவையாக இருக்கும் . அதைப்போன்ற சங்கும் அதிலிருந்து எழும்பும் பேரரவமும் வாத்தியக்கருவிகளும் அங்கு பூஜை நடக்கிறது என்பதை உனக்கு உணர்த்தவில்லையா ?

ஈதென்ன இப்படி உறங்குகிறாய் ? பேய் முலை பாலை குடித்தவனின் கதையை சொல்லவா ?

அவன் குழந்தையாக இருக்கும்போது அவனை கொல்ல அரக்கி ஒருவளை ஏவினான் கம்சன் . அவள் அன்பே வடிவான தாயைப்போல வேடமிட்டு அந்தக்குழந்தையை அணுகி அதைக்கொஞ்சினால் ; பராமரித்தால் . குழந்தைக்கு சந்தர்ப்பம் பார்த்து தன் நஞ்சாகிய பாலை ஊட்டினாள் ; குழந்தையும் குடித்தது ; வல்லபம் செய்யும் அக்குழந்தை சாகவில்லை ; ஆனால் அரக்கி செத்து விழுந்தாள் . அப்படியா ? அப்புறம் ... அப்புறம்

அப்புறம் ஒரு அரக்கனை அனுப்பினான் கம்சன் . அவன் பிள்ளைகள் ஏறி விளையாடும் சகடமாக – வண்டியாக உரு மாறி குழந்தைக்கு முன்பு வந்து வந்து நிற்கிறது . அதில் அந்தக்குழந்தை ஏறினால் வானத்தில் உயரப்பறந்து அங்கிருந்து வண்டியை கவிழ்த்து குழந்தையை கொன்று விடலாமல்லவா ?


அந்தக்குழந்தையும் அதில் ஏறியது . வண்டியும் வானத்தில் உயர பறந்தது . குழந்தையும் கைதட்டி ரசித்தது . வண்டியை குடை சாய்க்கலாம் என இப்படி புரட்டினால் அந்தக்குழந்தை காலால் எதிர்பக்கமாக மிதித்து சாய விடாமல் தடுக்கிறது . சரி அந்தப்புரம் சாய்த்தால் இந்தப்புரம் மிதித்து சமப்படுத்துகிறது . ஒரு மாபெரும் அரக்கன் ஒரு குழந்தையின் காலுக்கு எதிராக சக்தியை பிரயோகித்து பலமிழந்து சோர்ந்துபோய் பூமியில் வந்து விழுந்து மூச்சிரைத்து செத்துப்போனான்


அரசர்கள் செங்கோலை வைத்து ஆட்சி செய்வதை கோலோச்சுதல் என்பார்கள் ; அதைப்போல காலால் அவன் கள்ளசகடத்தை கலக்கழிய காலோச்சினானாம் .


அவன் குழந்தையாக இருக்கும்போதே இவ்வளவு பராக்கிரமம் காட்டினானா ?

ஆம் . அவன் வெள்ளமாக பொங்கும் பாற்கடலில் ஆதிசேஷன் என்ற அதிதேவர் மீது அறிதுயில் கொள்ளும் பரமாத்மா . அவனே படைக்கப்பட்ட யாவற்றுக்கும் வித்து . வெளிப்படாத அருவமான கடவுளின் வெளிப்பட்ட யாவும் - ஜடஇயற்கையும் உயிரிணங்களும் அனைத்தும் அவனைக்கொண்டே கடவுளால் படைக்கப்பட்டது . ஆகவேதான் அவனை அறிதுயிலில் இருக்கிறவனாக - ஜடமாகவும் அதே நேரத்தில் இயங்குகிறவனாகவும் காட்ட பாற்கடலில் துயில்கிறவன் என்கிறார்கள் .

இன்றைக்கு உலகத்தால் பாராட்டப்படும் ஞானிகளும் முனிவர்களும் யோகிகளும் எதனால் இந்த உன்னதமான நிலையை அடைந்தார்கள் தெரியுமா ?

நீயும் அவர்களைப்போல பெரும் சாதனை செய்யவேண்டுமா ?

எளிதான ரகசியம் . வழி அனைத்து படைப்புகளுக்கும் வித்தான அவனை உள்ளத்தில் உள்வாங்கி இருத்திகொள்வதுதான் . அவனை மட்டும் உள்ளத்தில் குடியேற்றி விட்டால்போதுமானது ; சகலமும் கைவரப்பெறும்

அதற்கு நீ என்ன செய்யவேண்டும் . முதலாவது கேள் . யார் எது சொன்னாலும் கேட்டு பழகு . கேள்விஞானம் என்றுதான் உள்ளது , புரிந்தாலும் புரியாவிட்டாலும் கேட்கிற காது – மனநிலையை வளர்த்துக்கொள்க .

அதற்குத்தான் சத்சங்கம் கூடும் கோவிலுக்கு போகவேண்டும் . நீ என்றோ கேட்டது உனக்குள்ளாக மெல்ல வளர்ந்து சந்தர்ப்பம் சூழ்நிலை வாய்த்ததும் உனக்குள்ளாக இருந்து பிராகாசிக்கிற அறிவாக வெளிப்படும்

அதற்குத்தான் கோவிலுக்கு போகவேண்டும் . அங்கு பல பிறவிகளாக அந்தப்பரந்தாமனை உள்ளத்துக்கொண்ட ஆத்மாக்கள் பலர் வருவார்கள் . அவர்கள் அங்கு வந்து உள்ளம் குளிர ஹரி ஹரி என மெல்ல உச்சரிப்பார்கள் . அந்த ஒலி உள்ளம் புகுந்து உன் இதயத்தை நிரப்பினால் நீயும் மேன்மையடைவாய்

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி





திருப்பாவை 7








அந்திக்கருக்கலில் கீச்கீச் சென்று பறவைகள் இரைச்சலிட்டு அடங்கிவிடும் : தூங்கிவிடும்

ஆனால் அக்கா அதிகாலையில் பறவை பேசியதாக அதுவும் ஆனைச்சாத்தன் என்றொரு புதுப்பேரையும் சொல்கிறாளே

அக்கா ஆடுமாடுகள் மேய்த்தவர்களுடன் எப்போது அணுபவம் பெற்றாள் என தெரியவில்லை

மலையோரங்களில் வாழும் ஒரு பறவை செம்போத்து

அது அதிகாலையில் கீச் கீச் என அகவிக்கொண்டே பறந்து சஞ்சீவி மூலிகையை தேடி கொழுந்தை சாப்பிடும் என்பார்கள் ஆயர்கள்

இந்தப்பறவை அரிதானது ; அதன் கூட்டில் சஞ்சீவியின் குச்சிகள் இருக்கும் என்பது நம்பிக்கை

இதனுடைய குரல் வெகுதூரம் கேட்கும்

ஆகவேதான் ஆனைச்சாத்தன் என அக்கா சொல்கிறார்

வலிமையான சத்தத்தை கேட்டு கிடைக்கு காவல் உள்ளோர் முழித்துக்கொள்வர்

சாத்தன் என்றால் பாதுகாக்கிற போர்த்தெய்வம்

செம்போத்து துஷ்ட மிருகங்களை மிரட்டி எச்சரிக்கை செய்யும் இயல்புள்ளது

ஆயர்களுக்கு தோழன் போபோல

இந்தப்பாடல் முழுவதும் நாராயணனை நம்புவோர்க்கு வசதி வாய்ப்புகள் கூடுமென்கிறாள்

காசும் பணமும் கலகலக்கும் தொழில் தயிரை கடைந்து வெண்ணெய் எடுத்தல்

செல்வசெழிப்பான குடும்பத்தில் செல்லமாக வளர்க்கப்படும் வாலிபப்பெண்ணே

தயிர்கடையும் சத்தம் உன்னை எழுப்பவில்லையோ

கேசி என்ற அரக்கணை கொன்ற கேசவனை கோயிலில் புகழ்ந்துபாடும் சத்தம் கேட்கலியோ

பொருளும் வேண்டும் அருளும் வேண்டும்

தயிரும் கடையனும் கேசவனையும் வேண்டனும் என்கிறாள் கோதை அக்கா