Total Pageviews

Tuesday 31 December 2019

திருப்பாவை 21







ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்


பால் பீய்ச்சும் போது பால் பொங்கி வழியும் படியாக மறுக்காமல் பாலை சொறிகிற வள்ளல் பெரும் பசுக்களை தனது கிடையில் அளவில்லாமல் சேர்த்து வைத்து காத்து விரித்தியாக்கும் ஆற்றல் அறிவு உள்ள நந்தகோபனின் மகனே


உனக்கு சமர்ப்பிக்கும் எங்கள் வாசகத்தை கேட்பாயாக

சகலவற்றிக்கும் படியளக்கிறவன் - ஊட்டுவிக்கிறவன் நீ

நன்மை தீமைகளுக்கு அதிபதியும் நீயே


சகலமும் உன்னைக்கொண்டே உன் மூலமாகவே இறைவனால் உற்பவிக்கப்படுகின்றன

யோவான் 1:3  சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

அருவமான இறைவன் என்ற வெட்டவெளிக்குள் துலங்கும் பருப்பொருள் ; வானம் ; வெளி உள்ளடக்கிய பிரபஞ்சம் அனைத்தும் நீயே - பரமாத்மா எனப்படுகிறாய்


தோன்றிய பொருட்கள் அனைத்தும் பால்வெளி மண்டலத்தில் அல்லவோ இயங்கி வருகிறது


உன்னையே அருட்பெருஞ்ஜோதி என்று வள்ளலார் உள்ளிட்ட ஞானிகள் வர்ணிக்கிறார்கள்


தோற்றமாய் நின்ற சுடரே

கீதை 11 : 3 சகலவற்றின் அதிபதியே ! ( பரமேஸ்வரா ) கடவுளின் உன்னதமான வெளிப்பாடே ! ( நாராயணனே ) சகல உருவங்களின் மொத்த சொருபமான புருஸோத்தமரே ! இப்போது உங்களது மனித சொரூபத்தை காண்பதுபோல தங்களது பரமாத்ம சொரூபத்தையும் காண ஆசைப்படுகிறேன் !

கீதை 11 : 4 யோகங்களால் விளையும் அமானுஸ்ய சக்திகளின் அதிபதியே ! ( யோகேஸ்வரா ) என்னால் தாங்கிக்கொள்ளுமளவு எனது சக்திக்குட்பட்ட அளவு உமது பரமாத்ம சொரூபத்தை காட்டும் படி இறைஞ்சுகிறேன் !

கீதை 11 : 5 கடவுளின் உன்னதமான வெளிப்பாடாகிய கிரிஸ்ணர் கூறினார் ! பார்த்தா ! நூற்றுக்கணக்காகவும் ஆயிரக்கணக்காகவும் பற்பலவிதமாகவும் பலரூபமாகவும் பலவர்ணமாகவும் உள்ள பரமாத்ம தெய்வீக சொரூபத்தை உன்னால் முடிந்தளவு பார் !!

கீதை 11 : 6 பரத குலத்தோன்றலே ! பற்பல வெளிப்பாடுகளான ஆதித்யர்கள் , வசுக்கள் , ருத்ரர்கள் , அஸ்விணிகள் ,மருத்துகள் மற்றும் பல தேவதூதர்கள் இன்னும் யாரும் பார்த்திராத அதிசயமான விவரங்களை இப்போது பார் !

கீதை 11 : 7 அர்ச்சுணா ! இப்போது இந்த உடலில் அண்டசராசரங்கள் அனைத்தையும் நீ பார்க்கலாம் ! இயங்குவன இயங்காதவன இதுவரை நீ பார்க்க விரும்பியவைகள் இனிமேலும் நீ பார்க்க விரும்புபவைகள் அனைத்தையும் அந்த பரமாத்ம சொரூபத்தில் உன்னால் காணமுடியும் !

கீதை 11 : 8 ஆனால் அதை உனது ஊணகண்ணால் காணமுடியாது ! ஆகவே தெய்வீக பார்வையை உனக்கு அருளுகிறேன் ! இப்போது எனது மஹிமையை தரிசிப்பாயாக !

 
தர்மம் மட்டுமல்ல ; அதர்மமும் உனக்குள்ளேயே தானே முகிழ்த்துள்ளன


தேவர்கள் மட்டுமல்ல ; அசுரர்களும் உன்னிடமிருந்தே உற்பவித்துள்ளனர்


ஆகவே சகல பாவங்களுக்கும் நீயும் பொறுப்பேற்று வலியை ஒவ்வொரு அவதாரத்திலும் (ராமர் , கிறிஷ்ணர் & இயேசு) சுமந்தும் வருகிறாய்


மாற்றார்களால் - அசுரர்களால் உனக்கு உண்டாகும் வலி எப்போது நீங்கும் என்றால் அவர்கள் தங்களை உணர்ந்து தீமைகளிலிருந்து விடுபட்டு தப்ப உன் வாசலில் சரண்டையும் நாளில் அன்றோ

கீதை 11 : 21 வானமண்டல சேனைகளான தேவதூதூதர்களின் திரள்கூட்டமும் உம்மிடம் சரணடைகின்றன ! அவைகளில் சிலவோ ( அசுரர்கள் ) சுயமகிமை தேடியதற்காக அச்சமடைந்தனவாக கைகளை கூப்பி தொழுது உம்மிடம் மன்றாடி தொழுகின்றன ! உம்மைத்துதித்து உம்மிலே ஐக்கியமடைகின்றன !

அதுபோலவே உம்மை போற்றி புகழ்ந்து பாடுகிறோம் எங்களை ரட்சித்து அருள்வாயாக


No comments:

Post a Comment