Total Pageviews

Sunday 29 December 2019

திருப்பாவை 28





கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

ஆடுமாடுகள் பால் கொடுப்பதால் அவைகளுக்கு பெயர் கறவைகள்

கறவைகளை காமதேனு என்பார்கள்

அக்காலத்தில் மிக சிறந்த தொழில்களில் ஆடுமாடு மேய்த்தல் ஒன்று

ஆயர் குலம் என்பது இன்று பல ஜாதிகளிலும் விரவி கிடக்கிறது

அவர்கள் மேய்ச்சலுக்கு செல்லும்போது ; சாப்பாடும் கொண்டுபோய் விடுவார்கள்

காட்டுச்சாப்பாடு ; கட்டுச்சாப்பாடு நல்ல உரம்

ஆகவே ஆட்டம் பாட்டமுமாகவே இருக்கும்

அவர்கள் மெட்டுக்கட்டி பாடுவதையே கானம் சேர்த்து உண்போம் என்கிறாள் அக்கா

ஆயர் குலத்துக்கே இயல்பான ஆட்டம் பாட்டத்திற்கு பறை என்ற தப்பு ஆதாரமானது

மாலை வேளைகளில் ; வயல்களில் அறுவடை காலத்தில் அங்கு மேய்ச்சலுக்கு வரும் ஆயர்கள் பறை அடித்து ஆடி மகிழ்விப்பார்களாம்


அவர்களுக்கு அந்த பறை நிறையும்படியாக நெல்லை ; தானியங்களை பரிசளிப்பார்களாம்

பறை என்ற வார்த்தைக்கு பரிசு என்பதும் அர்த்தம்

தப்பு இசையை எழுப்பும் ; அது நிறைய பரிசையும் வேளாளர்கள் கொடுப்பார்கள்

கோதை அக்கா திருப்பாவை முழுவதும் திரும்ப திரும்ப பறை என்ற வார்த்தையை இறைவனிடம் பெரும் அருளாக ; பொருளாகவே பயன்படுத்தியுள்ளார்

பெரியாழ்வார் கண்டு எடுத்த பெண் பிள்ளை வாழியே என உலகம் அவளை கொண்டாடினாலும் ; அவள் ஆயர் குலத்து பெருமைகளையே பேசிக்கொண்டிருப்பாள்

இதன் தாத்பர்யம் ஏதென்றால் மனிதர்களாகிய நாம் அனைவருமே இறை பேரரசில் வளர்க்கப்படும் கறவைகளே

ஆத்மாக்கள் அனைத்தும் பசுக்களே

நாம் அவரை இன்னாரென்று அறியாதபோதும் நம்மை அவர் அறிந்தே இருக்கிறார்

பிறவிகள் தோறும் பரமாத்மாவானவர் குருவாக ; ஆயனாக நம்மை வழிநடத்திக்கொண்டுதானே உள்ளார்

நாராயணன் இயேசுவாக வெளிநாட்டு மக்களை நல்வழிப்படுத்த வந்தபோது தன்னை நல்ல ஆயன் என பாரா பாராவாக விளக்கம் கொடுத்துள்ளார்

1. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.

2. வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.

3. வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான்.

4. அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.

5. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்.

6. இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை.

7. ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

8. எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.

9. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

10. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

11. நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். 


ஆயன் ; மேய்ப்பன் ; குரு எல்லாமே ஒரே அர்த்தம் உள்ளவை

மண்ணிலிருந்து உண்டாகிற குருமார்கள் பலர் ; தங்கள் நிறுவனங்களை வளர்க்க பலரை அட்டையாக சுரண்டி விடுகிறார்கள்

ஆனால் பரத்திலிருந்து பூமிக்கு வருகிற சற்குருநாதர்கள் வாழ்கிற காலத்தில் பூமியில் பிறந்திருப்போர் பேறு பெற்றோர்களே

ராமர் ; கிறிஷ்ணர் ; இயேசுவின் காலத்தில் அவரோடு வாழ்ந்து அவருடன் தொண்டூழியம் செய்தோர்
பேறு பெற்றோர்களே

வரப்போகிற சத்திய யுகத்தை மலர செய்கிற பணி இவர்களிடமே உள்ளது

வரவேண்டிய சமரச வேதாந்தி இறைவனின் அபிஷேகத்தோடு வெளிப்படும் காலத்தில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள்

அப்படி யுகம் யுகமாக
ராமர் ; கிறிஷ்ணர் ; இயேசுவின் காலத்தில் அவருடன் தொண்டூழியம் செய்தோர் பலர் பிறந்திருப்பதை காண்கிறேன்

ஆகவே வரவேண்டியவரை வரவேற்கும் பிரார்த்தனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்கிறேன்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடுபிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே

கண்ணா என்று அவரை சிறுபேர் அழைத்து இந்தியாவே கொண்டாடி மகிழ்கிறது

தை 11 : 14 விதிர்விதிர்த்து நிலைதடுமாறி மயிர்க்கால்கள் கூச்செரிந்தும் வியப்புமேலிட்டவனாய் அர்ச்சுணன் இரு கைகளையும் கூப்பியவனாக தலைசாய்த்து வணங்கி கடவுளின் உன்னதமான வெளிப்பாடாகிய கிரிஸ்ணரை துதிக்கதொடங்கினான் !

கீதை 11 : 15 எனதருமை கிரிஸ்ணா ! சற்குருவே ! அனைத்து தேவதூதர்களையும் அனைத்து படைப்பினங்களையும் ஒன்று சேர உம் சரீரத்தில் காண்கிறேன் ! படைப்பு தொழிலுக்கு நியமிக்கபட்ட பிரம்மாவை தாமரையில் அமர்ந்திருப்பவராகவும் ; அதுபோல ருத்திரர் சிவனையும் ; இன்னும் மகா முணிவர்களையும்  சாதுக்களையும் அசுரர்களையும் தெய்வீக சர்ப்பங்களையும் காண்கிறேன் !

கீதை 11 : 16 அண்டபகிரண்டங்களின் தலைவனே ! உமது பரமாத்ம சொரூபத்தில் பலபல கைகளையும் தோள்களையும் வாய்களையும் கண்களையும் எல்லையே இல்லாமல் பரந்து பரந்து எங்கெங்கும் விரிந்துகொண்டே இருப்பதாக காண்கிறேன் ! உம்மிடத்தில் முடிவையோ நடுவையோ துவக்கத்தையோ என்னால் காண முடியவில்லை !

கீதை 11 : 17 இந்த பரமாத்ம சொரூபம் அதன் ஒளிவெள்ள பிரகாசத்தால் காண்பதற்கு கடிணமானதாக இருக்கிறது !வெடித்து சிதறுகிற தீப்பிழம்புகளால் எண்திசையிலும் பரவி நிறைவதாகவும் அளவிடமுடியாத சூரியக்கதிர்வீச்சு போலவும் நான் காண்கிறேன் அத்தோடு பலவகையான மகுடங்களையும் ஆரங்களையும் பதக்கங்களையும் அணிந்துள்ளதாகம் மகிமையைக்காண்கிறேன் !

கீதை 11 : 18 நீரே உன்னதமும் மூலப்பொருளுமாகிய பிரதான பெளதீகம் ! இந்தப்பேரண்டம் முழுமையும் முடிவாக மறையும் இடம் நீரே ! நீரே ஆதியானவர் ! நீரே அழிவில்லாதவர் ! நீரே தெய்வீக சம்பத்துகள் பெளதீக சம்பத்துகள் யாவற்றையும் நிர்வகிக்கிறவர் ! நீரே கடவுளின் அதி உயர்ந்த வெளிப்பாடாகவும் இருக்கிறவர் !

கீதை 11 : 19 ஆதியும் அந்தமும் நடுவும் இல்லாதவர் நீரே ! உமது மகிமை எல்லையற்றதாக விரிந்துகொண்டே இருப்பது ! எண்ணிறந்த கைகளையும் சந்திர சூரிய நட்சத்திரங்களை ஒத்த கண்களையும் உடையவர் நீரே ! உமது வாயிலிருந்து ஜுவாலிக்கிற அக்கிணி புறப்படுவதையும் உமது கதிர்வீச்சுக்களால் பேரண்டம் முழுவதும் தகித்து எரிவதாகவும் காண்கிறேன் !

கீதை 11 : 20 நீர் ஒருவரே வானங்கள் நட்சத்திர மண்டலங்கள் அனைத்திலும் அவற்றுக்கு ஊடாகவும் விரவியிருப்பவராக காண்கிறேன் ! உன்னதமானவரே ! ஆச்சரயமான படுபயங்கரமுமான இந்த பரமாத்ம சொரூபத்தை காணும்போது எல்லா நட்சத்திர மண்டலங்களும் தூசியைப்போல ஆகிவிட்டன !

கீதை 11 : 38 நீரே ஆதிதேவர் ! ஆதிபுருஷர் ! பழமையானவரும் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்தின் இறுதி அடைக்கலமுமானவரும் நீரே ! அனைத்தையும் அறிந்தவரும் அனைவராலும் அறியப்படவேண்டிய இலக்கும் நீரே ! பரமான புகலிடமும் நீரே ! எல்லையற்ற ரூபமானவரும் பிரபஞ்ச தோற்றம் முழுவதிலும் பரவியுள்ளவரும் நீரே !

கீதை 11 : 39  நீரே வாயு ! நீரே எமன் ! நீரே அக்னி ! நீரே வருணன் ! நீரே சந்திரன் ! நீரே மனுக்குலத்தின் உடையவர் ! ஆதிமூலத்தின் குமாரனும் நீரே ! எனது மரியாதை கலந்த வணக்கங்களை ஆயிரமாயிரம் முறைகள் சமர்பிக்கிறேன் !!

கீதை 11 : 40 முன்னிருந்தும் பின்னிருந்தும் எல்லாத்திக்குகளிலிருந்தும் உம்மை வணங்குகிறேன் ! எல்லையற்ற சக்தியும் எல்லையற்ற ஆற்றலும் நீரே ! நீரே எங்கும் பரவி நிறைகின்றீர் !!

கீதை 11 : 41 உம்மை நண்பன் என எண்ணிக்கொண்டு கிரிஸ்ணா  யாதவா நண்பனே என்றெல்லாம் அகந்தையுடன் அழைத்துள்ளேன் ! உம்மை ஆழமாக உணராமல் பித்தத்தினாலும் பிரேமையினாலும் புத்திக்குறைவாலும் நான் செய்தவை அனைத்தையும் பொருத்தருள்வீராக !

கீதை 11 : 42 பொழுதுபோக்கின்போதும் ; உணவருந்தும்போதும் ; ஒரே படுக்கையில் படுத்திருந்தபோதும் நண்பர்களுக்கு மத்தியிலும் தனியாகவும் கூட கிண்டலும் கேலியும் செய்துள்ளேன் ! இழிவுகளை கடந்தவரே ! இத்த்கைய குற்றங்களையும் மன்னிப்பீராக !!

நண்பனும் சீடனுமான அர்ச்சுணனே விஷ்வருபத்தை தரிசித்து விட்டு தாழ விழுந்து இத்தகைய வார்த்தைகளை சொன்னார்


கோதை அக்காவும் அதே போலவே வேண்டுகிறார் : சிறுபேர் அழைத்தோம் சீறி அருளாதே

No comments:

Post a Comment