Total Pageviews

Tuesday 31 December 2019

திருப்பாவை 23







மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

ஏன் சிங்கம் காட்டுக்கு ராஜாவாக இருக்கிறது என்பதை பற்றி கோதை அக்கா இங்கு சொல்கிறாள்

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ காடுகளில் பரவிக்கொண்டு உள்ளது


தீ பரவுவதை கண்டு தப்பி ஓடுவதற்கு கூட தெரியாமல் பேந்த பேந்த விழித்துக்கொண்டு அங்கு நிற்கும் மிருகங்களை பிபிசி காணொளி எடுத்து போடுகிறார்கள்

பரிதாபமாக இருக்கிறது

தீயை உணர்ந்து தப்பி ஓட அவை அறியவில்லை

ஆனால் அக்கா சொல்கிறாள்

மாரி மழை கணத்து பெய்ததால் சுருண்டு படுத்து உறங்கும் சிங்கம் ; தீயின் வெப்பத்தை உணர்ந்து கண்விழித்து கர்ஜித்து பிடரி மயிரை உதறி தாவி புறப்பட்டு தீ இல்லாத இடத்துக்கு வந்து சேருமாம்

அதனுடைய  கர்ஜனை நாலா பக்கமும் சுழன்று மிருகங்களை உசுப்பி அதன் கர்ஜனையை தொடர்ந்து வந்து தப்பி பிழைக்க வழிகாட்டுமாம்

அக்கா எவ்வளவு அனுபவசாலி

உவமை ;ஒப்பீடு செய்வதிலும் எவ்வளவு நேர்த்தி

கிறிஷ்ணனை நீ சிங்கம் போன்றவன் என்கிறாள்

அறிவு திறன் ; தப்பும் நேர்த்தி ; தப்புவிக்கும் வல்லமை உள்ளவன் என்கிறாள்

உலகம் முழுவதும் சிங்காசனமே ஆட்சி பீடமாக இருக்கிறதே ; அதன் காரணம் காட்டுக்கு அதிபதி என்பதற்காக மட்டுமல்ல ;அதன்

அறிவு திறன் ; தப்பும் நேர்த்தி ; தப்புவிக்கும் வல்லமை ஆகும்

சர்வலோகாதிபதியான நீயும் சிங்காசனத்தில் இருந்து நாங்கள் உம் புகழ் பாடி வந்திருப்பதின் நோக்கத்தை ஆராய்ந்து அருள்வாயாக

No comments:

Post a Comment