Total Pageviews

668

Tuesday, 31 December 2019

திருப்பாவை 8







கீழ்வானம் வெள்ளென்று வெளுத்து விட்டது

மாடுகளும் கூட வீட்டை விட்டு வெளியேறி புல்வெளிகளில் மேயத்தொடங்கி விட்டன

மார்கழி நீராடி கோவிலில் சென்று சேவிக்க வாலிப பிள்ளைகளும் புறப்பட்டு விட்டார்கள்

ஆனால் நான்தான் அவர்களை தடுத்து இங்கு அழைத்து வந்திருக்கிறேன்

ஆயர் பாடியில் செல்வச்செழிப்புள்ள தலையானவள் நீ

நாம் சென்று அவனை பாடி துதித்து சேவித்தால் ஆஹா ஓஹோ என பலர் புகழுமபடியாக வாழலாம்

ஏனென்றால் அவன் குதிரை முகம் கொண்ட வலிய அரக்கனின் வாயை பிளந்தவன் அல்லவா

கம்ஸணனின் அரசவை மல்லர்களான சாணூரன் மற்றும் முஷ்டிகன் ஆகியோரை மல்யுத்தத்தில் அடித்து வீழ்த்தியவன் அல்லவா

நம் செல்வம் மட்டும் போதுமானதல்ல ; நமக்கு ஆவி மண்டலத்தில் வருகிற சிக்கல்களை வீழ்த்தி பாதுகாக்கிறவனின் தயவும் வேண்டுமல்லவா

நோய்க்கும் பாரு பேய்க்கும் பாரு என்ற பழமொழியை சாதாரண பொதுமக்கள் நல்வாழ்வுக்கு வழிகாட்டுகிறாள் கோதை அக்கா

ஆன்ம வாழ்வில் உயர்வதற்கு முயற்சிக்கத்தான் ஆன்மீகம் என்று இல்லை

சாதாரண பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சில பூஜை புனஸ்காரங்களை கடைபிடிப்பது அவர்களை பாதுகாக்கும்

வருடம் ஒரு முறை நோன்பு நோற்பது எல்லா மதங்களிலும் நடைமுறையில் உள்ளதுதானே

கிறிஸ்தவத்தில் லெந்து நோன்பு ; இசுலாத்தில் ரம்ஜான் நோன்பு ; வைணவத்தில் திருப்பாவை நோன்பு ; சைவத்தில் திறுவெம்பாவை நோன்பு ; அய்யப்பன் நோன்பு ; பழனி பாதயாத்திரை நோன்பு என கடமையாக்கி உள்ளார்கள்

சரியை அல்லது சாங்கிய வழிபாடு சாதாரண பொதுமக்கள் கடைபிடித்தல் உத்தமம் ; ஆன்ம வாழ்விலுள்ளோர் அவர்களை ஊக்குவிக்க நாமும் கடைபிடிக்க வேண்டும்

உள்ளேயே தேட வேண்டிய இறைவனை எதற்காக வெளியே தேட வேண்டும் என தத்துவம் பேசிக்கொண்டு இருக்கலாகாது

No comments:

Post a Comment