Total Pageviews

Sunday 29 December 2019

திருப்பாவை 26






           மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆழி நிலையாய் அருளேலோர் எம்பாவாய்

மால் என்றால் எல்லை 


எல்லை என்றாலேயே ஒரு பொருள் அல்லது பெளதீகம் அல்லது ஆட்சி அமைைப்பு என்று அர்த்தம் 

வெட்டவெளியில் சகல பெளதீகமும் அவற்றிர்க்கு எல்லை எதுவோ அதுவே மால்

எல்லப்பன் ; எல்லாளன் என்றெல்லாம் பெயர் வைத்திற்கிறார்களே அந்த எல்லையானவரே திருமால்

மாலே ; மணிவண்ணா

இந்த பிரபஞ்சம் முழுதும் பால்வெளி மண்டலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறதாம்

பால்வெளியையே மணிவண்ணன் என்கிறார்கள்

மேலே நான்குறிப்பிட்டவாறு மார்கழி விரதம் இருப்போர் வேண்டுதல் என்னவென்றால் உன் கையில் உள்ள பாஞ்சாசைனியம்

திருமாலின் கையில் உள்ளது வலம்புரி சங்கு

பால் வெளியில் இயங்கும் இயக்கத்திலிருந்து ஓம் என்ற பிரணவ சத்தம் வந்துகொண்டே இருக்கிறது என்பார்கள்

இட வலமாக சுழலும் பிரபஞ்ச உறுப்புகள் பிரணவ ஓசையால் ஒன்றை ஒன்றை வலுப்படுத்திக்கொள்கின்றன

அதிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் வளர் சீதை மாற்றத்தை உண்டாக்குகின்றன

இதை சுதர்சன சக்கரம் என்றார்கள்

ஒலியும் ஒளியுமே சக்தியாக ஆற்றலாக காலந்தோடி கொண்டிருக்கின்றன

இந்த இயற்கை என்பது படர்க்கையாக இருப்பதும் உண்மை ; அதுவே பிரகிருதியாக ஒரு நபராக - அதிதேவர் நாராயணன் ஆக இயங்கிக்கொண்டிருப்பதும் உண்மை

இயற்கையாக இருக்கும் போது கோல விளக்காகவும் ; கொடியாகவும் ; விதானமாகவும் இருக்கிறதாம்

அதுவே நபராக இயங்கும் போது ஆழியில் நிலைத்துள்ள நாராயணனாகவும் உள்ளாராம்

அத்வைதமும் உண்மை ; துவைதமும் உண்மை என்கிறாள் கோதை அக்கா


No comments:

Post a Comment