Total Pageviews

668

Tuesday, 31 December 2019

திருப்பாவை 12






கன்றுக்குட்டியை உடைய எருமை தன் கன்றை நினைத்து இரக்கம் கொள்கிறதாம்

கனைத்து அழைக்கிறதாம்

குட்டிக்கு பசிக்காத்தால் அது தாவி வரவில்லையாம்

ஆனாலும் தாய் நினைத்து பாலை சொரிகிறதாம்

அப்படி தானாய் சொரிந்த பாலால் வீடு சேறாகி விடுகிறதாம்

அவ்வளவு மிகுதியான பாலை திரட்சியாக உடையவன் என்றால் அவன் பெரிய செல்வந்தன் அல்லவா

செல்வச்சீமான் பலராமனின் தங்கையே

சுபத்ரையே

பனிபெய்து ஈரமான தலையோடு உன் வாசலில் நிற்கிறோம்

அனைத்து இல்லத்தாரும் உன் பேருறக்கத்தை பற்றி கோள் பேச இடம் கொடுக்கலாமா

தென் இலங்கையிலிருந்து புஸ்பக விமானத்தில் ஆங்காங்கு வந்து இராவணன் செய்த அக்கிரமங்களை அடக்கி நம்மை காத்த மனத்துக்கு இனியவர்களை பாடவேண்டாமோ

கோதை அக்கா கோடாங்கி அடித்துத்தான் சுபத்ரையை எழுப்புகிறாள்

அது ஏதென்றால் இராவணனை அழித்தது இராமர் மட்டும் அல்லவே

அந்த லஷ்மணன்தானே அர்ச்சுனராக அவதரித்தார்

அவரின் காதல் மனைவியல்லவா சுபத்ரை

உன் மனத்துக்கு இனியானை பாடவும் வாய் திறவாய்

No comments:

Post a Comment